Monday, 8 September 2014

Tagged Under:

காதல் கதைகளுக்கு பொருந்தும் நடிகர் சித்தார்த் : இயக்குநர் பிரசாத் ராமர்

By: Unknown On: 04:04
  • Share The Gag
  •  பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் துடிப்புள்ள காதலனாக தமிழில் அறிமுகமான நடிகர் சித்தார்த் தமிழ் திரையை விட தெலுங்குத் திரையில் சிறந்த காதலர் என்று பெயரெடுத்தவர். ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘உதயம்’ போன்ற காதல் படங்களில் நடித்த சித்தார்த் மாறுபட்ட கதைக் களம் கொண்ட ‘ஜிகர்த்தண்டா’ படத்தில் நடித்து வெற்றி பெற்றார்.

    உலக நாயகன் நடிப்பில் வெளிவந்த ‘எனக்குள் ஒருவன்’ பட தலைப்பில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசியா’ என்ற படம் மீளுருவாக்கம் செய்யப்படுகிறது. இதில் சித்தார்த், தீபா சன்னிதி நடிக்கிறார்கள். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் பிரசாத் ராமர் இயக்குகிறார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கிறார்

    காதல்தான் இந்த கதையின் அடிப்படையான விஷயம். அதற்கு சித்தார்த் மிக பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் பிரசாத் ராமர் கூறுகிறார் . மேலும் ‘லூசியாவை’ பார்த்துவிட்டு இந்தப் படத்தின் மீளுருவாக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு இந்த படத்தை ஆரம்பித்து வைத்ததே நடிகர் சித்தார்த் தான் கூறும் இயக்குநர் பிரசாத் ராமர், தீபா சன்னிதியுடனான அவரது காதல் காட்சிகள் நீண்ட நாட்களுக்கு பேசப்படுவதாக இருக்கும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

    0 comments:

    Post a Comment